பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் உட்பட 300 பேரின் செல்போன் தகவல்களை இஸ்ரேலின் என்எஸ்ஓ உருவாக்கிய பெகாசஸ் மென்பொருளை உளவு பார்த்ததாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் உளவு வழக்கில் விரிவான விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் பெகாசஸ் உளவு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Translate »
error: Content is protected !!