தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுகவின் நகர் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலர் தங்க தமிழ் செல்வன், மாநில விவசாய கூலி தொழிலாளர் தலைவர் எல். மூக்கையா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில் தமிழக துணை முதல்வர் நகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து தற்பொழுது வரை நெளிவு சுளிவாக இருந்து செயல்படுபவர் என புகழ்ந்து பேச துவங்கிய பின்பு அவர் அவ்வாறு இருந்து கோடி கோடியாக சம்பாதித்து நாடாளுமன்ற தேர்தலில் 800 கோடி ரூபாய் செலவு செய்து தனது மகனை வெற்றி பெற வைத்தார் எனவும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாக திட்டம் தீட்டி உள்ளதாகவும், தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செலவம் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடிப்பதே நமது குறிக்கோள் எனவும், தமிழகம் வர இருக்கு அமித்ஷா கையில் ஆளும் கட்சியின் ஊழல் பட்டியல் இருப்பதால் மந்திரிகளின் அனைவரும் பயந்து போய் உள்ளதாகவும், திமுகவிற்கு எந்த பயமும் இல்லை எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக மக்கள் விரும்பி உள்ளதாகவும், அதனை தடுக்க தமிழக வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியளில் தகுதியானவர்களை நீக்கி உள்ளதாகவும், அதனை கண்டு பிடித்து அதிக உறுப்பினர்களை சேர்க்கும் கட்சி நிர்வாகிக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க மோதிரமும், இரண்டாம் பரிசாக அரைபவுன் மோதிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
Attachments area