பெரியகுளத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வாக்களிப்பு

பெரியகுளத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வாக்களித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள செவன்த் டே மழலையர் பள்ளியில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வாக்குச்சாவடி எண் 109 இல் தனது வாக்கை செலுத்தினார்.

முன்னதாக வாக்களிக்க வந்த மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு உடல் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு இலவச கையுறை வழங்கப்பட்டது. பின்னர்  மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என சரி பார்த்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

வாக்களித்த முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று குறிப்பிட்டார். முன்னதாக அதை வாக்குச்சாவடியில் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் மற்றும் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வாக்களித்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!