மதுரை மாநகராட்சி வார்டு எண் 94க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஒப்பந்த டிராக்டர் மூலம் அப்பகுதிமக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ய அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது. இன்று மேற்ச்சொன்ன வார்டு எண் 94க்கு உட்பட்ட பாம்பன் நகர் நுழைவு வாயில் பகுதியில் டிராக்டர் எண் TN50 A 3926 மூலம் இன்று 05-03-2021 இன்று மதியம் அனுப்பப்பட்ட குடிநீரை அந்த வாகனத்தின் ஓட்டுநர் அப்பகுதிமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ததாக கணக்கு காட்டும் நோக்கில் குடிநீர் சாலையில் திறந்து விட்டு வீணாக்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ…
குறிப்பு : குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டுவரும் சூழலில் குடிநீரை ஏன் சாலையில் திறந்து விட்டு வீணாக்குகிறீர்கள் என சமூக ஆர்வலர்கள் அந்த குடிநீர் ஒப்பந்த டிராக்டர் எண் TN50 A 3926னின் ஓட்டுனரிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டபோது மதுரை மாநகராட்சி வார்டு எண் 94ன் உதவி பொறியாளர் மேற்ச்சொன்ன பகுதியில் (செயல்படும் தனியார் கல்லூரியால் பராமரிக்கப்படும்) செடிகளுக்கு தண்ணீரை ஊற்ற உத்தரவிட்டுள்ளதாக ஓட்டுர் கூறியதாக தெரிகிறது.
குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் குடிநீரை சாலையில் திறந்து விட்டு வீணாக்கி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ததாக போலி கணக்கு காட்டி சிட்டையைபோடும் மதுரை மாநகராட்சி அதிகாரியின் புத்திசாலிதனத்தை என்ன வென்பது ?