தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன.
திமுகவை தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. நேற்று (16.03.2021) காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில், இன்று திமுக கூட்டணி கட்சியான மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டுவருவது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை, எட்டுவழிச் சாலை ரத்து என பல்வேறு அம்சங்கள் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.