போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது.
இதுவரை 4,425 பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்கத்தால் உயிர் இழக்கும் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தான் ரெம்டெஸிவர் டோஸ்கள் போபால் அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டுள்ளன. 850 டோஸ் ரெம்டெஸிவர் தடுப்பு மருந்துகள் தற்போது காணாமல் போயுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் மருந்து நிறுவனங்கள் உயிர் காக்கும் மருந்துகளை விற்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தடுப்பு மருந்து டோஸ்கள் காணாமல் போனதை அடுத்து கமிஷனர் கிவைட்டா கியபாட் மட்டும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் இர்ஷாத் வாலி உள்ளிட்டோர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.