மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த புதிய திட்டம்

மராட்டியத்தில் புதிதாக பாதிப்படையும் கொரோனா நோய்யாளிகளுக்கு தனி ஆஸ்பத்திரி, தனி மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதிதாக பாதித்த கொரோனா நோய்யாளிகளை தனிமைபடுத்தும் விதமாக இவர்களுக்காக தனி ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை சேவை இயக்குனர் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் தெரிவித்தார்.

இதை குறித்து அவர் கூறியது,

கொரோனா நோய்யாளிகள் வீட்டில் தனிமைப்படுத்துவதால் வீட்டில் உள்ள நபர்களுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்கும் வழியாக தனிமை மையத்தில் அவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தனிமை படுத்தப்பட்ட மையத்தில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு  அணைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் அரசு வலிறுத்தியுள்ளது. இதற்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தனிமை மையத்திற்கு மாற்றப்பட மாட்டார்கள். புதிதாக கொரோனா பாதித்த நபர்கள் மட்டும் தான் தனிமை மையத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!