வரும் 19ஆம் தேதி (ஜூலை) முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும். கூட்டம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து 18 ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடது உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசரகால சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.