முக்கிய செய்திகள்:/// அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் – வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு – சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் – அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ‘ரோபோ’ சின்னம் ஒதுக்கீடு – புதுச்சேரியில் அ.தி.மு க, என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி கூட்டணி உறுதியானது – மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி ஒப்பந்தம் – சட்டமன்ற தேர்தல் – பாமக இன்று அவசர ஆலோசனை – திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு – கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து – 9 பேர் உயிரிழப்பு

*அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

*திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

*சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் : ஒரு தெருவில் 3 பேருக்கு பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்.

*தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி: தேமுதிக இன்று அவசர ஆலோசனை.

*ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139*.

*அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்குரோபோதேர்தல் சின்னமாக ஒதுக்கீடு.

*தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை ஆலோசனையில் காவல்துறை, வருமான வரிதுறை, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

*விழுப்புரம் மாவட்ட சோதனைச்சாவடி போலீசார் மீது கலெக்டர் அதிருப்தி.

*இன்று மரியாதை நிமித்தமாக நடிகர் அர்ஜுன் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் Kishan reddy ji மற்றும் மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு.

*திமுககாங். அணி 158 இடங்களில் வெல்லும்: டைம்ஸ் நவ்சிவோட்டர் சர்வே அதிமுகபாஜக அணி 65 இடங்களில் வெற்றி பெறும்: டைம்ஸ் நவ்சிவோட்டர் சர்வே.

*புதுச்சேரியில் .தி.மு , என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி கூட்டணி உறுதியானது. முன்னாள் முதல்வர் ரங்கசாமி நாளை முறைப்படி அறிவிப்பார் என தகவல்.

*திமுக கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, 3 தொகுதிகள் ஒதுக்கீடு: உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில், ‘இன்னும் முடிவு எட்டப்படவில்லைஎன்று ஈஸ்வரன் மறுப்பு.

*மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்து ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

*சட்டமன்ற தேர்தல்பாமக இன்று அவசர ஆலோசனை: அதிமுகவுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அவசர ஆலோசனை. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் ஆலோசனை. காணொலி மூலம் ஆலோசனை நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு.

*திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.

*கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து – 9 பேர் உயிரிழப்பு.

Translate »
error: Content is protected !!