சென்னை,
யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்று அக்கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளரும் திருப்பூர் தெற்கு வேட்பாளருமான அனுஷா ரவி ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல்Makkal M பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக, அதிமுக தவிர மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் உருவெடுத்துள்ளது.
கட்டங்களாக வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அனுஷா ரவி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்திருந்த சிறப்புப் பேட்டியில் அவர் பேசுகையில், “ஒரு கல்வியாளராகவும் தொழில் முனைவோராகவும் இருந்தபோது, பல நல்ல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. அப்போது 10 பேருக்கு நல்லது செய்ய முடிந்தது. அரசியலுக்கு வந்தால் 100 பேருக்கு நல்ல செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.
இதனால்தான் அரசியலுக்கு வந்தேன்” என்றார். மக்கள் நீதி மய்யத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்துப் பேசிய அவர், “கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச்செல்வதுதான் முதல் பணி. நேர்மையான ஒரு தமிழக அரசு அமைந்து, இந்த மாநிலத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கைகள். இந்தக் கொள்கையை மக்களிடம் எடுத்துச்செல்வதே எனது பணி” என்று கூறினார்.
மேலும், மக்கள் நீதி மய்யத்தில் தற்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பலரும், ஏற்கனவே எதோ ஒரு வகையில் மக்களுக்கு பணியாற்றி வருபவர்கள் தான் என்றும் அவர்கள் மூலமே எங்கள் கொள்கைகளை எடுத்துச் செல்ல முயல்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர சமூக வலைத்தளங்களை ஊடகங்களையும் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசிய அவர். “கட்சியில் சேர்ந்த சில நாட்களே ஆகிறது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் என்னை நம்பி தேர்தலில் களமிறங்கும்படி என்னிடம் கேட்டுள்ளனர். எனக்கு நன்கு தெரிந்த ஊர், கடந்த 50 ஆண்டுகளாக அங்குதான் கல்விப் பணி செய்து வருகிறேன். தினசரி அங்கேயே இருப்பதால், மக்களுக்கு என்ன தேவை என்பது நன்றாகத் தெரியும்” என்றார்
மேலும், யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்றும் அந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, மக்கள் வாக்களித்தால் நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.