உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் இடைநிலைப் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 50% மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இம்மாதம் 5 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்க்கும் செயல்முறையைத் தொடங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.