விரைவில் பொதுத்துறை வங்கிகள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஓய்வு வழங்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு இடையே இதுபோன்ற விருப்ப ஓய்வுக்கான பரிந்துரைகளை ஏர் இந்தியா மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே நிர்வாக மாற்றம் எளிதாக இருக்கும் என்றும் நிதி அமைச்சக அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அதிக அளவு ஊழியர்கள் விரும்பி வெளியேறும் வகையில் மத்திய அரசு அறிவிக்கும் விருப்ப ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2021-22 நிதிநிலை அறிக்கையில் இரு பொதுத் துறை வங்கிகளையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்கும் பணியை அரசு தொடங்க உள்ளதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!