சண்டிகர்,
3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100வது நாளை எட்ட உள்ளது. இதைடுத்து சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம், ஹரியானாவில் உள்ள ஜில்த் கிராம மக்கள் அங்குள்ள மின் நிறுவனத்திற்குச் சென்றனர். மத்திய அரசின் மூன்று புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அரசு மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை, கிராமத்தில் எந்த அரசு வேலைகளையும் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அவர்கள் அறிவித்தனர். இந்த விவகாரம் மின் கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், நிறுவனத்தின் எஸ்.டி.ஓ வினீத் குமார் அந்த இடத்திற்கு விரைந்தார்.
எஸ்.டி.ஓ வினீத் குமார், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், கிராம மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு முழு கிராமத்திலும் கார்ப்பரேஷனால் கம்பங்கள் நிறுவப்பட்டதாகவும், அந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் மக்கள் அனுமதிக்கவில்லை.