கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
“வெள்ள சேதம் குறித்து பெல்காம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிரைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால் உடனடியாக அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பேசியுள்ளேன். நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மழை சேதம் குறித்த தகவல்களை நான் தொடர்ந்து சேகரித்து வருகிறேன். பலத்த மழை காரணமாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, நிவாரண உதவிகளை வழங்குவது போன்ற பணிகளை தீவிரமாக்கும்படி கூறியுள்ளேன்” என அவர் பதிவிட்டார்.