ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஸ்காலர்ஷிப் விழிப்புணர் முகாம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஸ்காலர்சிப் குறித்த விழிப்புணர்வு முகாம், பெரியகுளத்தில் நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு கல்வி உதவிகள், ஸ்காலர்சிப்கள் முலம் படிப்பிற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஏராளமான மாணவ, மாணவியருக்கு இத்தகைய நிதியுதவி பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

இந்த நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஸ்காலர்சிப் குறித்த விழிப்புணர்வு முகாம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் கல்வி உதவிகள், ஸ்காலர்சிப் முலம் வரும் நிதியுதவியினை பெறும் வழிகள், அதற்கான விண்ணப்பங்களை பெறுவது, பூர்த்தி செய்வது உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரியகுளம் தென்கரை தண்டுப்பாளையம் தெருவில் நடைபெற்ற இந்த முகாமில் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கலந்த கொண்டு மாணவ, மாணவியருக்க தேவையான உதவிகள் செய்தனர். முகாமில், ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!