வானில் அதிசய நிகழ்வாக, அக்டோபர் 31ம் தேதி இரவு வானில் நீல நிறத்தில் நிலவு தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை இந்தியாவில் காண முடியும்.
வானில் உள்ள சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும்போது, அபூர்வமான அதிசய நிகழ்வுகள் நடப்பதுண்டு. பல வருடங்களுக்கு ஒரு முறையோ, வருடங்களுக்கு ஒரு முறையோ இவ்வாறு ஏற்படும்.
அத்தகைய ஒரு நிகழ்வாக, அக்டோபர் 31ம் தேதி (நாளை) இரவு, வானத்தில் ஒரு அரிய நிகழ்வு ஏற்பட இருக்கிறது. வானில் நீல நிலத்தில் நிலவு தோன்றவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் தோன்றக்கூடிய பௌர்ணமி போல இருந்தாலும் இந்த நிலவு சுற்றிலும் நீல நிறமாக காட்சியளிக்கும்.இது இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் தெரியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
கடைசியாக இது போன்ற ஒரு நிகழ்வு மார்ச் 31, 2018 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.