அசாம் மாநிலம் சிவசாகரில் 1 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் 1 லட்சம் வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, அசாமிய மொழியைப் பாதுகாத்தல் மற்றும் அதன் இலக்கியங்களை மேம்படுத்துதல், அசாமிய கலாச்சா ரத்தைப் பாதுகாப்பதை கொள்கையாக பாரதீய ஜனதா அரசு கொண்டுள்ளது.

கொரோனா தொற்றை அசாம் அரசாங்கம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. தடுப்பூசி இயக்கத்தை அசாம் இப்போது முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அசாமின் விரைவான வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மாநில மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் மத்திய அரசின்ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் பயனைப் பெற்றுள்ளனர். மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்தியமாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!