அடுத்த பிளான்.. அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுடன் தேமுதிக பேச்சுவார்த்தை..! கூட்டணி அமையுமா..?

சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அம்மா முன்னேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேதிமுக ஆகிய இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் மற்றும் தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் ஆகிய இரு முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக தொடர்ந்து தனித்து போட்டியிட பல்வேறு பணிகளில் நேற்றைய தினமே ஈடுபட்ட தொடங்கியது.

234 தொகுதிகளிலும் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்ட நிலையில், தற்போது இளங்கோவன் மற்றும் அமமுக சார்பில் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய பழனியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இருவருக்குமான அந்த ஒற்றுமை என்பதே இருவருமே தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான். அந்த அடிப்படையில் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். எத்தனை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும், தெற்கே எவ்வளவு, வடக்கே எவ்வளவு என்று பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

கிடைக்கக்கூடிய தகவல்கள் தேமுதிக தலைமைக்கு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் அடுத்தகட்டத்திற்கு இந்த பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. தேமுதிக தனித்து களமிறங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் கூட, அதை எதிர்கொள்ளக்கூடிய பணிகள், வேட்பாளர் யார் என்பது தொடர்பான தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இந்த பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் அசாதுதீன் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில சிறு கட்சிகள் அந்த கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த கூட்டணியில் தேமுதிக அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியும் என்று கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!