அடுத்த மூன்று நாட்களில் சுமார் 7 லட்சம் கூடுதல் தடுப்பூசி டோஸ்கள்

புது தில்லி,

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 7,29,610 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

90 லட்சத்திற்கும் அதிகமான (90,31,691) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை, சுமார் 18 கோடிக்கும் அதிகமான (18,00,03,160) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 17,09,71,429 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!