அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்

பெரியகுளம் பகுதியில் உள்ள அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக வேட்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள G. கல்லுப்பட்டி பகுதியிலுள்ள அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி பெரியகுளத்தில் உள்ள திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞர்களுக்கு திமுக வேட்பாளர் சரவணகுமார் கட்சி வேஷ்டி அணிவித்து வரவேற்றார். இதில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் பெரிய பாண்டி நகர செயலாளர் முரளி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்

Translate »
error: Content is protected !!