அதிமுக பெண் எம்எல்ஏக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..?

ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக பெண் எம்எல்ஏ மீண்டும் போட்டியிட எதிர்ப்பு. பொதுமக்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு போராட்டம்.

சேலம்,

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் சித்ரா குணசேகரன் மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம். ஏற்காட்டில் பதற்றம்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக தற்போது பதவி வகிப்பவர் சித்ரா குணசேகரன். மீண்டும் அதிமுக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமை கழகம் மீண்டும் அவரின் பெயரையே அறிவித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்காடு பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஏற்காடு தனி தொகுதியாக உள்ளதால் அதுவும் பழங்குடியினர் தொகுதியாக உள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா குணசேகரன் ஏற்காடு பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும்கடந்த தேர்தலில் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு தனியாக அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என உறுதியளித்திருந்தார்

அந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றவில்லை, இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் ஏற்காடு பேருந்து நிலையம் முன்பு சித்ரா குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்ஏற்கனவே உறுதி அளித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மீண்டும் எப்படி உங்களால் போட்டி போட முடிகிறது என வசை பாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!