அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து… கருப்பு கொடியுடன் வெள்ளாளர் முன்னேற்ற கழக இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதி அதிமுக வேட்பளார் முருகன் வடுகபட்டி, தாமரைக்குளம், காலேஜ்விளக்கு, காந்திநகர், உள்ளிட்ட பகுதியில் மாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் முருகன் பிரச்சாரத்திற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழக இளைஞர்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியகுளம் காவல்துறை துணைகண்காணிபாளர் முத்துக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலதுறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த வெள்ள்ளார் முன்னேற்ற கழக இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியுடன் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்யும் பகுதிக்கு முதல்வரையும், துணை முதல்வரையும் ஒலிக என்ற கோஷத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அங்கு இருந்த காவல்துறையினர் அதிமுக பிரச்சாரத்திற்கு கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தனர்.
அதில் சிலர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓடியவர்களையும் காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். இதனை அடுத்து அந்த பகுதியில் அதிமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை முடித்து சென்றார். அதிமுக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.