அந்த கட்சி மட்டும் வரவே கூடாது… இருந்தாலும் திமுகவுக்கு உதவிய “பாஜக”..!

சென்னை,

திமுக இந்த முறை ஜாக்கிரதையாகவே காய்களை நகர்த்த தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மாதங்களாகவே கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடக்க ஆரம்பித்தன. அப்போதிருந்தே கூட்டணி கட்சிகள் அப்செட்தான்.

இவ்வளவு சீட் தான் ஒதுக்க முடியும் என்ற தகவல் கூட்டணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக திமுக தலைவரை நேரில் சந்தித்து பேச முடியாமல் கூட்டணி தலைவர்கள் காத்திருப்பதாகவும்கூட ஒருசில செய்திகள் கசிந்தன.,

இந்த சமயத்தில்தான், ஒருவேளை அதிருப்தி காரணமாக கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகின. மற்றொரு பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்றவை கமலுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருப்பாகவும் கூறப்பட்டன. மதிமுக, விசிக போன்ற கட்சிகள் அதிமுகவுடன் சேரக்கூடும் என்றும் முணுமுணுக்கப்பட்டன.

இதில் விசிக பற்றி அதிகமாகவே தகவல்கள் வந்தன. ஒருவேளை பாமக மட்டும் அதிமுக கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால், விசிக கூட்டணியை கண்டிப்பாக வைத்திருக்கும் என்றும் யூகங்களாக சொல்லப்பட்டன.

என்னதான் பாமக நேர் எதிரியாக இருந்தாலும், அதிமுக கூட்டணியில் பாஜக கெத்தாக உட்கார்ந்து கொண்டுள்ளதை மறுக்கமுடியாது. கூட்டணி, சீட், முதல்வர் வேட்பாளர் போன்ற விவகாரங்களில் அதிமுகவையே பாஜக அலற வைத்து கொண்டிருந்ததையும் மற்ற கட்சிகள் கவனிக்காமலும் இல்லை.

கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு பாஜகதான் முதல் குறி. எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் அந்த கட்சியை காலூன்ற விட்டுவிடக்கூடாது என்பதில் கறார் காட்டி வருகின்றனர். ஒருவேளை பாஜக தனித்து போட்டியிட்டாலோ, அல்லது அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இருந்தாலோ, நிச்சயம் திமுகவில் அதிருப்தியில் இருந்த கட்சிகள் அதிமுகவில் கரம் கோர்த்திருக்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜகஅதிமுக கூட்டணி முடிவாகவும்தான், இதற்கு ஒரு வழி கிடைத்தது. திமுகவில் அதிருப்தி தலைவர்கள் யாரும் அதிமுக பக்கம் செல்ல முடியாத நிலைமை உருவானது. மேலும் வேறு வழியில்லாமல் திமுக கூட்டணியிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தும் ஏற்பட்டுள்ளது. ஆக, இன்று திமுக கூட்டணி உறுதியாகி இருப்பதற்கு காரணமே பாஜகதான் என்றால் அது மிகையல்ல..!

 

Translate »
error: Content is protected !!