அமமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மனுத்தாக்கல் செய்த பின் பேட்டி

அமமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மனுத்தாக்கல் செய்த பின் பேட்டி :

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏற்கனவே அமைச்சராக இருந்த வளர்மதி இந்த தொகுதிக்கு என்று சிறப்பாக இதுவரை எதுவும் செய்யவில்லை அவருடைய வளர்ச்சியை மட்டுமே அதிக முக்கியத்துவம் ஒருத்தர் ஸ்ரீரங்கம் தொகுதியில் மிக முக்கிய பிரச்சனையான  அடிமனை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆளும் கட்சி ஆண்ட கட்சி தந்திருக்கும் வாக்குறுதிகள் ஆன மாதம் உதவி தொகை 1000 ரூபாய் 1500 ரூபாய் தருவதாக கொடுத்த வாக்குறுதிகள் சாத்தியமற்றது தமிழக அரசின் பொருளாதார நெருக்கடி கடனில் தற்போது உள்ள நிலையில் இந்த வாக்குறுதிகளை அவர்களால் நிச்சயம் செயல்படுத்த முடியாது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வாசனை திரவிய தொழிற்சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கண்டிப்பாக என்னால் நிறைவேற்ற முடியும் என்றும் ஊழலற்ற ஒரு அரசு அரசை நிர்வகிக்க முடியும் என்றும் கடந்த ஒன்பது வருடங்கள் நான் மாநகராட்சியின் மேயராக இருந்தபோது எந்தவித குற்றச்சாட்டுகளும் ஊழல் புகார்களும் என் மீது  எதுவும் இல்லை என கூறினார்.

Translate »
error: Content is protected !!