அரசு விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு கல் குவாரி உரிமம் வழங்கியதற்காக, அமைச்சர் சிவி சண்முகம் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் வானூர் எம்எல்ஏ சக்கரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் கல் குவாரி நடத்த அமைச்சர் சிவி சண்முகம் உரிமம் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பொது ஊழியர்கள் தங்களுக்கும் தங்கள் உறவினர்களுக்கும் அரசுப்பணியை டெண்டர் இருக்கக்கூடாது என்ற நிலையை மீறி உரிமம் தரப்பட்டுள்ளது. குவாரியில் கடந்த மூன்றாம் தேதி நேரிட்ட விபத்தின் மூலம் இந்த விதிமீறல் அம்பலமாகியுள்ளத்தாக,ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏவின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி உரிமத்தை ரத்து செய்வதோடு, அதை வழங்கிய அமைச்சர் சிவி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.