தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள், மின் உற்பத்தி, நுகர் பொருள் வாணிப கழகம், தேயிலை தோட்ட கழக ஊழியர்கள் உள்ளிட்டோர், பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% தீபாவளி போனசாக கிடைக்கும். இதன்படி, நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர்.
அதன்படி, ஏறத்தாழ 2 லட்சத்து 92 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 210.48 கோடி ரூபாய் போனஸ், கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னமு இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.