அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் முதலிடம் ,7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பு.

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் நடந்து முடிந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இந்திய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 664 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று அகில இந்திய மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்துள்ள நிலையில் மாணவர் ஜீவித்குமார் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தனக்கு பொதுப்பிரிவில் இடம் கிடைக்கும் என்பதனால் பொது பிரிவில் அரசு மருத்துவ படிப்பிற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தான் மருத்துவ படிப்புக்கான இடத்தை தேர்வு செய்தால் மற்றொரு மாணவருக்கு மருத்துவ கனவு சிதைந்து விடும் என்பதனால் பொதுப்பிரிவில் மருத்துவ படிப்பிற்கான இடத்தை தேர்வு செய்து தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மற்றும் ஒரு அரசு பள்ளி மாணவருக்கு வழிவிட்டு தனது மருத்துவ படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இனிவரும் ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் தன்னை போன்று உள்ள அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் என்பதனையும் வேண்டுகோளாக வைத்துள்ளார்.

Attachments area
Translate »
error: Content is protected !!