நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று பீசீஆர் பரிசோதனையில் கண்டறியப்படுபவர்கள் அவர்களின் வீடுகளிலேயே மாவட்ட சுகாதார பணிமனை கண்காணிப்பின்கீழ் சிகிச்சைகளை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த செயன்முறை எதிர்வரும் திங்கட்கிழமை(17) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக முதன்மை சுகாதார மற்றும் கொரோனா தடுப்புத்துறை அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா அறிகுறி மற்றும் ஏனைய நோய்களைக் கொண்டுள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.