அலறிய அரவக்குறிச்சி.. “அவர்”தான்.. சேப்ட்டி.. பச்சை மண்ணா மாறணும்னா.. நமீதா துண்டு சீட்டு பேச்சு..!

சென்னை,

காஞ்ச மண்ணு பச்சை மண்ணு மாறணும்னா தாமரைக்கு மட்டும் வோட் போடுங்க.. ஓகே?” என்று நமீதா பேசிய பேச்சை கேட்டு அரவக்குறிச்சியே ஆடிப்போய் உள்ளது.

நமீதா வாயில் சுட்டுப் போட்டாலும் நல்ல தமிழ் வராது போல.. மலையாளிகள், யாராவது சரியாக மலையாளம் பேச வராவிட்டால் உடனே உனக்குத் தெரிந்த பாஷையில் பேசு.. மலையாளத்தை விட்ரு என்று ஸ்டிரிக்ட்டாக சொல்லி விடுவார்கள்.

ஆனால் தமிழர்கள்தான் என்ன பேசினாலும் சகித்துக் கொள்ளும் புண்ணியவான்களாச்சே.. ஸோ.. நமீதா தமிழையும் காது வலிக்க வலிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு வாயில் தமிழ் வருகிறதோ இல்லையோ, இங்கிலீஷில் எழுதி வைத்து வாக்காளர்களிடம் நைஸாக பேச வருகிறது.. நமீதா பேசுவது யாருக்கும் புரியவில்லை என்றாலும், அவரை நேரில் பார்ப்பதற்காகவே மக்கள் கூடுகிறார்கள். வேனில் நின்றுகொண்டு, ஒரு பேப்பரை கையில் வைத்து, அதை பார்த்து பார்த்து படிக்கிறார் நமீதா..

சில தமிழ் வார்த்தைகளை இந்தியில் எழுதி வைத்துப் பேசுகிறார் போல. அதுவும் அரைகுறையாக. கொடுமையாகத்தான் இருக்கிறது. எந்த தொகுதிக்கு போனாலும் இப்படித்தான்.. வேட்பாளர் பெயரும் வாயில் வருவதில்லை.. அந்த தொகுதியின் பெயரும் நமீதாவுக்கு சொல்ல தெரிவதில்லை.. இருந்தாலும் திக்கி திணறி பேசி வருகிறார். அதையும் ஒரு கூட்டம் கைதட்டி விசிலடித்து வரவேற்று கொண்டிருக்கிறது.

இப்படித்தான் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.. கையில் துண்டு பேப்பரை வைத்து கொண்டு நமீதா பேசியது இதுதான்: “கர்நாடக போலீஸ் ஆபீசர்.. டிசிபியா இருந்தார்.. ஒரு தலைவர், மக்களோட மக்கள் மனசில் இருக்கார்.. சிங்கம் மாதிரி ஒரு போலீஸ் ஆபிசர் நம்ம ஏரியாவில் இருந்தால் லா & ஆர்டர் & கிரைம் எல்லாமே சேப்ட்டி.. எல்லாமே சூப்பரா இருக்கும்ல..?

அப்போ ஒரு சிங்கம் வந்து எம்எல்ஏவா ஆக வந்தால் எப்புடி இருக்கும்? சூப்பரா இருக்கும் இல்லியா,..? அது மட்டும் இல்லை, நல்லா படிச்சவரு, எல்லா விவ்வரமும் தெரிஞ்சவருநல்லா திறமை இருக்குறவரு.. காஞ்ச மண்ணு பச்ச மண்ணா மாறணும்னா அந்த ஐபிஎஸ்க்கு தாமரைக்கு மட்டும் வோட் போடுங்க.. ஓகே?

நம்ம ஐபிஎஸ் அவர்கல், உங்க சோந்த பில்லை (சொந்தபிள்ளை) பில்லை, உங்க சோந்த (சொந்த) ஊருக்காரர்.. அவர்க்கு உங்க சப்போர்ட் குடுங்க.. சரியா? வோட் யாருக்கு போட போறீங்க? ஐபிஎஸ் தாமரைக்கு. அர்வக்குறிச்சியில் (அரவக்குறிச்சி) தாமரை மலரும்.. தமில்நாடு வலரும்.. நன்றிஎன்றார்.

வழக்கமாக, நடந்து முடிந்த 5 ஆண்டு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பார்கள்அல்லது நாங்கள் வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு இதை செய்ய போகிறோம் என்று சொல்லி ஓட்டு கேட்பார்கள்.. வேட்பாளர், தொகுதி, வரலாறு, தமிழ், மண் சார்ந்த பிரச்சனைகளை அறியாமல், துண்டு சீட்டுக்குள் சிக்கிக் கொண்ட அரசியலை என்னவென்று சொல்வது? கட்சியில் சேர்த்து இத்தனை மாதம் ஆகிறது.. ஆனால், “தாமரை மலர்ந்தே தீரும்என்ற வார்த்தை இன்னும் நமீதாவுக்கு ஒழுங்காக வரவில்லை.. குஜராத்தில் இருந்து வந்து தமிழனுக்காக ஓட்டு கேட்ட விந்தையை நாம் என்னவென்று சொல்வது?!

Translate »
error: Content is protected !!