இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தகுந்த நேரத்தில் சிகிச்சைகள் கிடைக்காததால் பலர் தங்கள் உயிரை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் தன்னார்வாலர்கள், நடிகர்கள் முன் வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா களப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
ப்ராஜக்ட் ஸ்மைல் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சேவையாற்றி வருகிறார் . அவரே ஆம்புலன்சை ஓட்டி சென்று நோயாளிகளை மருத்துவமனைக்கு செல்கிறார்.
அத்துடன் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு முன் வாகனத்தில் எடுத்துச் செல்கிறார். அர்ஜுன் கௌடாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் யுவரத்னா, ரஷ்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.