இந்தியாவில் ஒரேநாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது.
32.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 2,83,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 86.23 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.11 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 12.66 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் நேற்று (மே 18) ஒரே நாளில் 20,08,296 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 32 கோடியே 03 லட்சத்து 01 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
உலகம்
இன்று (மே 19-ம் தேதி) காலை நிலவரப்படி உலகில் கொரோனாவால் 16 கோடியே 48 லட்சத்து 97 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 லட்சத்து 18 ஆயிரத்து 661 பேர் பலியாகி உள்ளனர். 14 கோடியே 68 லட்சத்து 54 ஆயிரத்து 496 பேர் மீண்டுள்ளனர்.