இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 –பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படைந்து சிகிச்சையில் உள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுவதால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 –பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தொற்று பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 3,741- பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.99 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 05 ஆயிரத்து 399- ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.