இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும், சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என அரசு கூறியுள்ளது.
ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 9.16 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 18,222 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.