இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,37,03,665 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,10,525 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 1,97,34,823 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கொரோனாவிலிருந்து 3,52,181 பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,58,317 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17,72,14,256 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 30,94,48,585 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18,64,594 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!