இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாள்களாகவே கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
மத்திய சுகாதார துறை வெளிட்ட அறிக்கையில்,
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. நேற்று 88,977 கொரோனா பாதிப்பில் இருந்து குணம் குணமடைந்துள்ளார். ஒரே நாளில் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,587 ஆகும். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 656 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.03 சதவீதம். தினசரி தொற்று விகிதம் 3.24 சதவீதம். 11 நாட்களுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.