இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த மாதம் ஜூன் 21 அன்று, மத்திய அரசு புதிய தடுப்பூசி திட்டத்தை அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அப்போதிருந்து, நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கை 34 கோடி 46 லட்சம் 11 ஆயிரம் 291 ஆக உள்ளது .

 

 

Translate »
error: Content is protected !!