இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியே 1 லட்சத்து 48 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளதாக .சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 688 ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.81 சதவீதமாகும். புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து மேலும் 18,002 பேர் குணமடைந்தனர். இதனால், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரத்து 708 –ஆக அதிகரித்தது.

தொற்றுக்கு மேலும் 163 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரம், கேரளம், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!