இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்தி 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 1 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,320 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு தற்போது 1 லட்சத்து 76 ஆயிரத்து 498 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 19 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரத்து 120 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று 5 லட்சத்து 50 ஆயிரத்து 426 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக .சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!