புதுடெல்லி,
இந்தியாவில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்து 10 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளா, மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து 850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 ஆயிரத்து 695 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 16 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 216 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை 21 கோடியே 15 லட்சத்து 51 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.