இந்தியாவில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி,

இந்தியாவில் 2வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டி புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 63 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 825 ஆக உள்ளது.

ஒரே நாளில் 12,179 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது வரை 1 கோடியே 34 லட்சத்து 72 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 807 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக .சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 21 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

 

Translate »
error: Content is protected !!