இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற மக்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அதற்கு அணை போடும் விதமாக தடுப்பூசி திருவிழா எனும் முனைப்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மத்திய அரசு பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பற்றிய மத்திய நிதி மந்திரி பகிர்ந்துகொண்டதாக நிதியமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2-வது அலை ஏற்பட்டாலும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்பதில் தெளிவாக இருப்பதாகவும் உள்ளூர் கட்டுப்பாடு மட்டுமே இருக்கும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முழுமையாக முடக்க மத்திய அரசு விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டர். பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்..