இந்தியாவில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் இரண்டாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 92 ஆயிரத்து 596 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 63 நாட்களுக்கு பின் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.