இந்தியாவில் 97.29 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

புதுடெல்லி,

இந்தியாவில் 97.29 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 9,489 பேர் குணம் அடைந்துள்ளனர். அதேபோல் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்து 220 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 732 ஆகும். தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 637 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.29 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.43 ஆகவும் உள்ளது. மேலும் தற்போது 1.28 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் இதுவரை 82 லட்சத்து 85 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 122 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக .சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 20 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் 10 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரத்து 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 லட்சத்து 11 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்துள்ளனர். 8 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!