இந்தியா – பாகிஸ்தான் பாடரில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்.
தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுக்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமியின் மகனான ஆறுமுகம் என்பவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 18 ஆண்டுகளாக பணியில் உள்ளார்.
தற்பொழுது அவர் நாயக் என்னும் பதவியில் இந்தியா – பாக்கிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணியில் 10 விரர்களுடன் இருந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்த கேம்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரர் ஆறுமுகத்திற்கு பலத்த தீ காயம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவரை சிகிச்சைகாக ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார்.
இறந்த நிலையில் ராணுவ வீரரின் உடலை விமானம் மூலம் கோவை கொண்டு வந்து பின்பு ராணுவ வாகனத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அவரது சொந்த ஊரான வடிகட்டிக் கொண்டு வந்து உறவினர்கள் முன்னிலையில் மரியாதை செலுத்தப்பட்டு என்று ராணுவ வாகனத்தில் ராணுவ மரியாதையுடன் கொண்டு கொண்டுவரப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராணுவ உயரதிகாரிகள் மரியாதை செலுத்திய பின் ராணுவ வீரரின் உடலில் பொருத்தப்பட்ட தேசியக் கொடியை ராணுவ வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் வடுகபட்டி மயானக் கரையில் நடைபெற்றது.
பலியான ராணுவ வீரரின் இறுதி சடங்கு உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்தியா – பாக்கிஸ்தான் பாடரில் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரர் 18 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்று வீடு திரும்ப 3 மாதம் உள்ள நிலையில் பலியான சமபவத்தால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்திய எல்லையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசு பணி உள்ளிட்டவைகளை ஒரு மாதத்தில் வழங்குவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.