இந்த சிறந்த மகளிர் ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது- பிரதமர் மோடி

ஒலிம்பிக்மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக கடுமையாகப் போராடி இங்கிலாந்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்திய அணி பதக்கம் வெல்லும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

மகளிர் ஹாக்கி போட்டியில் ஒரு பதக்கத்தை இழந்தோம், ஆனால் இந்த அணி புதிய இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது. மேலும் இந்திய வீராங்கனைகள் அவர்களின் ஆட்டத்தில் முழு திறமையையும் காட்டியுள்ளனர். பதக்கத்தை இழந்தாலும், மகளிர் அணியின் திறமையான செயல்திறன் பலரை ஊக்குவிக்கும். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த செயல்திறனை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்.அவர்கள் முழுவதும் தங்களால் முடிந்ததை வழங்கினர். அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிடத்தக்க தைரியம், திறமை மற்றும் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை கொள்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!