இந்திய IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..

மெரிக்காவில் பணியாற்றி கொண்டிருக்கும் ஹெச் 1பி விசாதாரர்களில் அதிகம் இந்தியர்கள் தான். இதனால் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், அது இந்தியா வரை பிரதிபலிக்கிறது.இன்று உலகமே கொரோனாவால் சீர்குலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவும் இந்தியாவும் தான். தங்கம் விலை ஏறத் தொடங்கிருச்சே! இதுவரை கொடுத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டீர்களா?

அமெரிக்கர்கள் வேலையிழப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதற்கிடையில் பல லட்சம் பேர் உலகம் முழுக்க தங்களது வேலையினை இழந்தனர். இது வல்லரசு நாடான அமெரிக்காவில் மிக அதிகம் என்றே கூறலாம்.

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

இதற்கிடையில் தான் கடந்த ஜுன் 22 அன்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச் 1பி விசாவினை தடை செய்தார். இது அமெரிக்கர்கள் பல லட்சம் பேர் வேலையினை இழந்து வரும் நிலையில், அவர்களுக்கு தான் முன்னுரிமை என்றும் கூறினார். இதனால் பெருத்த அடி வாங்கியது இந்தியா தான்.

ஹெச் 1பி விசா பயன்பாடு

ஏனெனில் அமெரிக்காவில் இன்று வரையில் ஹெச் 1பி விசாவினை பயன்படுத்துபவர்களில் அதிகம் இந்தியர்கள் தான். அதெல்லாம் சரி,ஐடி ஊழியர்களுக்கு என்ன இன்ப அதிர்ச்சி வாருங்கள் பார்க்கலாம். இந்த விசாவினை அதிகம் பயன்படுத்துவது இந்தியர்கள் என்றாலும், அதில் அதிகம்பேர் இந்திய ஐடி துறையினர் தான். ஆனால் தற்போது இவர்களுக்கு நல்ல விஷயம் கூறுவதனை போல, டொனால்டு டிரம்ப்பின் இந்த விசா தடையினை அமெரிக்காவில் அமல்படுத்துவதை அமெரிக்காவின் ஃபெடரல் நீதிபதி ஒருவர் தடை செய்துள்ளார்.

டிரம்ப் தனது அதிகாரத்தினை மீறி விட்டார்

அதோடு ஜூன் மாதம் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட உத்தரவினால், ஜனாதிபதி தனது அரசியலமைப்பு அதிகாரத்தினை மீறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வணிகத்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு துறைக்கு எதிராக தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த வழக்கில், வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதி ஜெஃப்ரி வைட் டிரம்பின் தடைக்கு எதிராக தீர்பளித்துள்ளார்.

டிரம்பின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான தீர்ப்பு

நீதிபதி தனது 15 பக்க உத்தரவில், டிரம்ப்பின் குடியேற்றமற்ற வெளிநாட்டினரின் வேலை வாய்ப்பு தொடர்பாக, உள்நாட்டு கொள்கையை அமைப்பதற்கான அதிகாரத்தினை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை. அதோடு பொருளாதார மீட்சிக்கு துணைபுரிய நடுத்தர அல்லது உயர் திறமையான பதவிகளை நிரப்ப அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான, விசா கட்டுப்பாடுகளை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கும் என்றும் தேசிய உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் உத்தரவு என்ன?

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஜனாதிபதி ஹெச் 1 பி விசா மற்றும் ஹெச் 2பி விசா, எல் மற்றும் ஜே விசாக்களை தடை செய்தார். ஏப்ரலில் 90 நாட்களுக்கு இந்த தடையை நீட்டிக்க உத்தரவிட்டிருந்த டிரம்ப், அதன் பிறகு இந்த ஆண்டு முழுவதும் இந்த தடையை நீட்டித்தார். கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் முதல் மீட்பு நடவடிக்கையாக, உள்ளூர் மக்களுக்கு வேலைகளை கிடைக்கும் விதமாக தனது அதிரடியான உத்தரவினை பிறப்பித்தார்.

இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல விஷயம்

இந்த நிலையில் தான் அமெரிக்கா நீதிபதியே டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக, உத்தரவிட்டுள்ளார். இது இந்திய ஐடி ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயமாகும். எனினும் இந்த தீர்ப்பு குறித்து இன்னும் டிரம்ப் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எப்படியோங்க விரைவில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல காலம் காத்திருக்கு..

Translate »
error: Content is protected !!