இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், இனி வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் ஊழியர்கள் 50 % பேர் மட்டுமே வரவேண்டும்; வாரத்திற்கு 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் இனி 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். அதே நேரம் வாரத்திற்கு இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Translate »
error: Content is protected !!