வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை செய்வதற்கான கிட் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியை பயன்படுத்தி செய்யும் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்றால் பாதிப்பு இருப்பது உறுதியென்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே அவர்கள் ஆர்.டி–பி.சி.ஆர் சோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
மேலும் அது, சோதனை முடிவுகள் தங்களது சர்வரில் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கருவி மூலம் வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள, அதற்கான செயலி ஒன்றை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆப்–ல் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு செயலியிலேயே (App) காட்டும்.