லோக் ஜனஷக்தி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபரில் திடீரென இறந்தார். இன்று அவரது பிறந்த நாள்.
இதையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார்.
“இன்று எனது நண்பர் ராம்விலாஸ் பாஸ்வானின் பிறந்த நாள். அவர் இல்லாதது பேரிழப்பாக இருக்கிறது. அவர் இந்தியாவில் மிகவும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி ஆவார். அவர் அடி மக்கள் மேம்பாட்டிற்காக பணியாற்றினார் மற்றும் சமூகப் பணிகளை திறம்பட மேற்கொண்டார்,” என்று அவர் கூறினார்.