உத்தரப்பிரதேசம், மொராதாபாத் நகரில் மினி பஸ் – டிரக் மோதல்; 10 பேர் பலி

லக்னோ,

மினி பஸ்சும்டிரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த பஸ்சும் டிரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்த நபர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் கூறும்பொழுது, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.

இந்த விபத்து பற்றி சம்பவம் நடந்தபொழுது அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறும்பொழுது, வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்றன. இதில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!